Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 2.26 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு; 6.98 கோடி பேரின் ஆதார் தரவு விவரங்கள் சேகரிப்பு: விரல் ரேகை பதிவு கட்டாயம்

கோவை: தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 318 வட்டங்களில், 34,800 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 389 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பயனாளிகளாக 7 கோடியே 2 லட்சத்து 38 ஆயிரத்து 827 பேர் உள்ளனர். இதில் 6 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 2 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேர் செல்போன் எண் விவரங்களை பதிவு செய்துள்ளனர். மாநில அளவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஒன்றிய அரசு பல்வேறு ஒதுக்கீட்டில் உணவு பொருட்களை சப்ளை செய்து வருகிறது. பயனாளிகள் யார் யார் என்ற விவரங்களை ஆதார் அடிப்படையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் விவரங்களை ஒன்றிய அரசின் உணவு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சில லட்சம் பேர் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாக தெரிகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களும் தங்களது விரல் ரேகையை ஆதார் தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவுகளின் அடிப்படையில் தான் வரும் காலங்களில் உணவு பொருட்கள் ஒதுக்கீடு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் குறிப்பாக கொரோனா நோய் பரவல் காலங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவு கடந்த ஆண்டில் பாதியாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றிய அரசு கோதுமை, கெரசின் போன்றவற்றை வழங்குவதை அரிதாக்கி விட்டது. இதர உணவு பொருட்களுக்கும் பயனாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் மேலும் உணவு தானிய சப்ளையை நிறுத்தும் நோக்கத்தில் விரல் ரேகை பதிவை கட்டாயமாக்கி நெருக்கடி தருவதாக வாணிப கழகத்தினர், வழங்கல் பிரிவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மாநில அளவில் விரல் ரேகையை பெற ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை இனி நபர் கணக்கில் முறையாக வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் விற்பனை ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இறந்தவர்களின் பெயர்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. சிலர் ஆதார் கார்டு விரல் ரேகை, கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவியுடன் மேட்ச் ஆகவில்லை எனக்கூறுகிறார்கள். சிறார்களின் விரல் ரேகைகளில் மாற்றம் இருக்கிறது. இவர்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்தால் தான் விரல் ரேகை பெற முடியும். இந்த சிக்கல்களை தீர்க்க வேண்டியுள்ளது. அப்போது தான் 100 சதவீதம் அளவிற்கு விரல் ரேகை பதிவு பெற முடியும். ஒரு கார்டில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பேரும் விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயம்.

வெளியூர் வெளிநாடு சென்றாலும் இதில் விதி விலக்கு தர முடியாது’’ என்றனர். யன்பாட்டில் இருக்கிறது. இதில் பயனாளிகளாக 7 கோடியே 2 லட்சத்து 38 ஆயிரத்து 827 பேர் உள்ளனர். இதில் 6 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 2 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேர் செல்போன் எண் விவரங்களை பதிவு செய்துள்ளனர். மாநில அளவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஒன்றிய அரசு பல்வேறு ஒதுக்கீட்டில் உணவு பொருட்களை சப்ளை செய்து வருகிறது. பயனாளிகள் யார் யார் என்ற விவரங்களை ஆதார் அடிப்படையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் விவரங்களை ஒன்றிய அரசின் உணவு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சில லட்சம் பேர் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாக தெரிகிறது.

பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களும் தங்களது விரல் ரேகையை ஆதார் தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவுகளின் அடிப்படையில் தான் வரும் காலங்களில் உணவு பொருட்கள் ஒதுக்கீடு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் குறிப்பாக கொரோனா நோய் பரவல் காலங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவு கடந்த ஆண்டில் பாதியாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றிய அரசு கோதுமை, கெரசின் போன்றவற்றை வழங்குவதை அரிதாக்கி விட்டது. இதர உணவு பொருட்களுக்கும் பயனாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் மேலும் உணவு தானிய சப்ளையை நிறுத்தும் நோக்கத்தில் விரல் ரேகை பதிவை கட்டாயமாக்கி நெருக்கடி தருவதாக வாணிப கழகத்தினர், வழங்கல் பிரிவினர் குற்றம்சாட்டுகின்றனர். மாநில அளவில் விரல் ரேகையை பெற ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை இனி நபர் கணக்கில் முறையாக வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் விற்பனை ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இறந்தவர்களின் பெயர்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. சிலர் ஆதார் கார்டு விரல் ரேகை, கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவியுடன் மேட்ச் ஆகவில்லை எனக்கூறுகிறார்கள். சிறார்களின் விரல் ரேகைகளில் மாற்றம் இருக்கிறது. இவர்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்தால் தான் விரல் ரேகை பெற முடியும். இந்த சிக்கல்களை தீர்க்க வேண்டியுள்ளது. அப்போது தான் 100 சதவீதம் அளவிற்கு விரல் ரேகை பதிவு பெற முடியும். ஒரு கார்டில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பேரும் விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயம். வெளியூர் வெளிநாடு சென்றாலும் இதில் விதி விலக்கு தர முடியாது’’ என்றனர்.