சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாஷாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 29 ஆண்டுகளாக எனது தந்தை சிறையில் உள்ளார். எனவே, 85 வயது முதுமை மற்றும் உடல்நிலை காரணங்களை கருத்தில் கொண்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பாஷாவிற்கு மூன்று மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன் இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.