சென்னை: கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கர்நாடகாவில் செப்.6,8,9,10-ல் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.