கோவை: கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சித் துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் சோதனை நடத்தின. உக்கடம் லாரிபேட்டை பகுதிகளில் உள்ள 35 மீன் மார்க்கெட் விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள 16 கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது
இதில் 5 மொத்த மீன் விற்பனை கடைகளில் இருந்து 65 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38 கிலோ கெட்டுப்போன மீன்கள் என மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் 9 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.