சென்னை: கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கலைஞர் முதலமைச்சராகவும் – நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. 2025ம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, மெட்ரோ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: முதலமைச்சர் வலியுறுத்தல்
0