கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நேற்று காலை பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி ஒருவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, அவர் கொண்டு வந்த பையில் 9 எம்.எம் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண் பயணியை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதும், துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
கோவை ஏர்போர்ட்டில் பெண் பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்
0