கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகராட்சி பள்ளியில் ‘விரிச்சுவல் ரியாலிட்டி’ (மெய்நிகர் உலகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம்) ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்கள், சூரிய குடும்பத்தை அருகில் பார்க்கலாம் அல்லது ஒரு விஞ்ஞான ஆய்வகத்தில் பங்கேற்பதை உணரலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம் கிடைக்கும்; கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.