கோவை: வால்பாறை அடுத்த சேக்கல் முடி எஸ்டேட்டில் அங்கன்வாடிக்கு சென்ற குழந்தை மீது மரம் முறிந்து விழுந்தது. மரம் விழுந்ததில் முகிலன் (4) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த தந்தை முத்துகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள அபாய மரங்களை வெட்டக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.