கோவை: கோவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி சுப்பிரமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சுப்பிரமணி, முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முருகேசன் உயிரிழந்த நிலையில் சுப்பிரமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.