கோவை: கோவை காரமடை அருகே பாய் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்தரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நடத்திய சோதனையில் பாய் குடோன், 6 இருசக்கர வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை டன் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார், சுரேஷ் சந்திரன், சேகர், சசி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.