கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை காதலிப்பதாக கூறி கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் முதலில் 5 பேரை கைது செய்த நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. கடந்த 2021-ல் 9 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது. வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 9 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட 9 பேர் ஆஜர்
230