கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயத்தை திரளானோர் கண்டு ரசித்தனர். இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஜே.கே டயர் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தயம் கோவை செட்டி பாளையத்தில் நடைபெற்றது.10 மற்றும் 15 சுற்றுகள் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்களான தில்ஜீத், ருகான், சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் 20 பேர் என நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதே போல் பைக் பந்தயமும் பார்வையாளர்களை கவர்ந்தது. முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகள் மற்ற மாநிலங்களில் நடத்தப்படும் பல்வேறு சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.