சென்னை: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள #CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான – சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.