Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும்: 33 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் ஆகியோர் 2008-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 1988ல் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக சவுரிபாளையம் கிராமத்தில் 11.95 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனவும் நிலத்தை கையப்படுத்தியது செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி நிலம் கையகப்படுத்திய நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நிலம் கையகப்படுத்தியற்கு எதிரான வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரியதை அடுத்து நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வீட்டு வசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.