கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் கஞ்சா, ஆயுதங்கள், நம்பர் இல்லா பைக்குகள் பறிமுதல் செய்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் அறைகளில் தங்கியிருந்த வெளிநபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.