கோவை: கோவை விமான நிலையம் அருகே போலீஸ் எனக்கூறி 62 சவரன் தங்க சங்கிலி பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரை, காவலர்கள் உடையில் வந்த 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அப்துல் ரசாக்கை காரில் கடத்தி 62 சவரன் தங்க நகைகளை பறித்த கும்பல், அவரை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளது. அப்துல் ரசாக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மகேந்திரன், குருதேவா, திருமூர்த்தி, மகேஷ்வரனை தனிப்படை கைது செய்தது.