வறுத்து பொடி செய்வதற்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 2
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
வடித்த சாதம் – 1
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் சாதத்தை வடித்து தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே எண்ணெயில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காயையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.பின் அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.இறுதியாக சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.