தேவையான பொருட்கள்
2எலுமிச்சை பழம்
3 பச்சை மிளகாய்
2காய்ந்த மிளகாய்
4தேங்காய் துண்டுகள்
1/2 ஸ்பூன் சீரகம்
3 கப் சாதம்
1ஸ்பூன் கடலை பருப்பு
1/2ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
1/4 ஸ்பூன்மஞ்சத்தூள்
தேவைக்கு உப்பு
தேவைக்கு எண்ணெய்
ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லித்தழை
செய்முறை:
முதலில் பச்சை மிளகாய் சீரகம் தேங்காய்சிறிது நீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் தாளிக்கவேண்டும்.பின்பு அரைத்த விழுதைபச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் சாதத்தை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு ஆற விட வேண்டும்.ஒரு கிண்ணத்தில்சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து இரண்டு எலுமிச்சை பழம் பிழிந்து விடவேண்டும்.வதக்கிய தேங்காய் விழுதைசாதத்தில் சேர்க்கவும் பின்பு எலுமிச்சை சாறையும் சிறிது உப்பையும் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லியை கறிவேப்பிலைசேர்த்து சாதத்தை நன்றாக கிளற வேண்டும்.சத்தான தேங்காய் எலுமிச்சை சாதம் ரெடி.