சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.