சென்னை: நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அகமது ஏ.ஆர்.புகாரிக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2015 வரை இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை, உயர்தர நிலக்கரி எனக்கூறி இறக்குமதி செய்ததாக புகார் எழுந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.