கோவில்பட்டி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகலூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் – கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்துள்ளது. இதனைப்பார்த்த கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் கார்டுக்கு தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு பார்த்ததில் 17வது பெட்டியில் இருந்து நிலக்கரியில் தீப்பிடித்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து உயரழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து
0