இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயான் பெல் (42 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். பெல் நாளை மறுநாள் இலங்கை அணியுடன் இணைகிறார். இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட்களில் விளையாடி உள்ள அவர் 7700 ரன் (அதிகம் 235, 22 சதம், 46 அரை சதம்) மற்றும் 161 ஒருநாள் போட்டிகளில் 5416 ரன் (அதிகம் 141, 4 சதம், 35 அரை சதம்) விளாசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் ஆக. 21ல் தொடங்குகிறது.
பயிற்சியாளராக இயான் பெல்
previous post