திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்தநிலையில் வங்கியில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சரும், மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான மொய்தீனின் உறவினர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. நேற்று திருச்சூரில் உள்ள எம்எல்ஏ மொய்தீனின் வீட்டில் மத்திய அமலாக்கத்தினர் திடீர் சோதனை நடத்தினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது. 12 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மைதீனை கைது செய்ய கோரி வடக்காஞ்சேரியில் உள்ள அவரது வீடு நோக்கி காங்கிரசார் கண்டன பேரணி நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் காங்கிரசாரை விரட்டியடித்தனர்.