Wednesday, February 21, 2024
Home » காஞ்சிபுரத்தில் ஜன.3 முதல் 30ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

காஞ்சிபுரத்தில் ஜன.3 முதல் 30ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

by Ranjith

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜன.3ம்தேதி முதல் 30ம்தேதி வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகரத்தினை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம்கள் எதிர்வரும் 3ம்தேதி முதல் 30ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, ஜனவரி 3ம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 1, 2, 3, 4, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு குஜராத்தி சத்திரத்திலும், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 13 வரையிலான வார்டுகளுக்கு கல்யாணி திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. 4ம் தேதி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 5, 6, 7, 8, 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு அறிஞர் அண்ணா அரங்கத்திலும், ஏனாத்தூர் கிராம பஞ்சாயத்திற்கு சமுதாயக்கூடம், சமத்துவபுரத்திலும் நடைபெறுகிறது.

5ம் தேதி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 19, 20, 21, 22, 23, 24, 34 ஆகிய வார்டுகளுக்கு வணிகர் வீதி, மகாலஷ்மி திருமண மண்டபத்திலும், களியனூர் கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. 6ம் தேதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 25, 26, 27, 28, 29, 30 ஆகிய வார்டுகளுக்கு துளசி மகாலிலும், முத்தியால்பேட்டை கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. 9ம் தேதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 31, 32, 33, 35, 36, 45 ஆகிய வார்டுகளுக்கு பி.எம்.எஸ்.சாலம்மாள் திருமண மண்டபத்திலும், வையாவூர் கிராம பஞ்சாயத்திற்கு வி.பி.ஆர்.சி. கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

10ம் தேதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 46, 47, 48, 49, 50, 51 ஆகிய வார்டுகளுக்கு தனலஷ்மி திருமண மண்டபத்திலும், அய்யப்பன்தாங்கல் கிராம பஞ்சாயத்திற்கு சமுதாயக்கூடத்திலும் நடைபெறுகிறது. 11ம் தேதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 11, 12, 13, 14, 15, 37 ஆகிய வார்டுகளுக்கு பிள்ளையார்பாளையம் செங்குந்தர் சத்திரத்திலும், கெருகம்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு செல்வன் மகாலிலும் நடைபெறுகிறது. 12ம் தேதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 38, 39, 40, 41, 42, 43, 44 ஆகிய வார்டுகளுக்கு லஷ்மி கோவிந்தராஜ் திருமண மண்டபத்திலும், கொளப்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு ஜெ.ஜெ. மகாலிலும் நடைபெறுகிறது.

13ம் தேதி மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 14 முதல் 27 வரையிலான வார்டுகளுக்கு கல்யாணி திருமண மண்டபத்திலும், சிறுகாவேரிப்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறுகிறது. 18ம் தேதி குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 16 முதல் 30 வரையிலான வார்டுகளுக்கு மேத்தா நகர், மேத்தாலீஸ்வரர் திருமண மண்டபத்திலும், திம்மசமுத்திரம், கருப்படிதட்டடை கிராம பஞ்சாயத்திற்கு சிவசக்தி மகால், திம்மசமுத்திரத்திலும் நடைபெறுகிறது.

19ம் தேதி குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான வார்டுகளுக்கு சேக்கிழார் நகர் சமுதாயக் கூடத்திலும், புத்தேரி கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. 20ம் தேதி மவுலிவாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நடைபெறுகிறது. 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு வன்னிய சத்திரம், ஸ்ரீபெரும்புதூரிலும், கோனேரிக்குப்பம் கிராம பஞ்சாயத்திற்கு சண்முகா நகர், லயன்ஸ் கிளப் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

24ம் தேதி கீழம்பி கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வரதராஜபுரம் கிராம பஞ்சாயத்திற்கு நியாய விலைக்கடை எதிரிலும் நடைபெறுகிறது. 27ம் தேதி கீழ்கதிர்பூர் மற்றும் திருப்பருத்திக்குன்றம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஏ.வி.ஆர்.திருமண மண்டபத்திலும், நடுவீரப்பட்டு கிராம பஞ்சாயத்திற்கு ஆதிதிராவிடர் நலப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

30ம் தேதி வாலாஜபாத் பேரூராட்சிக்கு டி.பி.எல்.மகாலிலும், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு ஜெயா திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட முகாம்களில் உரிய ஆவணங்களுடன் அணுகி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

18 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi