சென்னை: சி.எம்.கே. கட்டுமான நிறுவனம் உள்பட 3 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சி.எம்.கே ப்ராஜெக்ட், கிரீன் பீல்ட், சத்தியமூர்த்தி & கோ நிறுவனங்கள் தொடர்புடைய 35 இடங்களில் ஐ.டி. சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக உள்ள வருமானவரி கணக்கை ஆய்வு செய்ததில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.