சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நமது தோழமையும், நாம் கொண்டுள்ள கொள்கைகளின் ஒற்றுமையும் நியாயமான, சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய போரில் நமது உறுதியை வலுப்படுத்துகின்றன. தாங்கள் நல்ல உடல் நலமும், வலிமையும் பெற்று பல்லாண்டுகாலம் மக்களுக்காகப் பணியாற்ற விழைகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.