போபால்: மத்தியபிரதேச மாநில பா.ஜ முதல்வர் மோகன்யாதவின் தலைமை செயலக சிறப்பு பணி அதிகாரி( ஓஎஸ்டி) லோகேஷ் சர்மா. இவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நல்லாட்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.இவரிடம் மபி பா.ஜ செயற்குழு உறுப்பினர் ஹிரேந்திர பகதூர் சிங் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நடந்து கொண்டார். மாநில அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவன விழாவில் லோகேஷ் சர்மா பங்கேற்ற போது அவரது மகளின் வேலை தொடர்பாக கோரிக்கை வைத்தார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் உருவான மன உளைச்சல் காரணமாக ஹிரேந்திர பகதூர் சிங் அவதூறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோகேஷ் சர்மா சார்பில் நைப் தாசில்தார் நிமேஷ் பாண்டே என்பவர் கமலாநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் ஹிரேந்திர பகதூர் சிங் கைது செய்யப்பட்டார்.