சான்பிரான்சிஸ்கோ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.