Friday, February 23, 2024
Home » முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் மூலம் 1.45 கோடி குடும்பங்கள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் மூலம் 1.45 கோடி குடும்பங்கள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by MuthuKumar

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் 2024-25ம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூ.1,228.27 கோடிக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கான 2024 ஜனவரி 11ம் தேதி தொடங்கி 2025 ஜனவரி 10ம் தேதி வரைக்கான பிரிமியம் தொகை ரூ.1,228.27 கோடிக்கான காசோலை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 1.45 கோடி. இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்தது, தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆட்சியில் ஆண்டு வருமானம் ரூ.72,000 இருந்ததை ரூ.1,20,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இத்திட்டம் 1829 மருத்துவமனைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் 854, தனியார் மருத்துவமனைகள் 975. இதில், 1513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. 8 சிறப்பு உயர்சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், 11 தொடர் சிகிச்சை முறைகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

17 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi