* துடைப்புத் துணியாக மாற்றலாம் பழைய காட்டன் சேலை, டி-ஷர்ட், கம்பளி போன்ற மென்மையான துணிகளை வீட்டின் தூசி, பாத்திரம் மற்றும் கம்பளி துடைப்பாக பயன்படுத்தலாம்.
* கைப்பை, பர்ஸ் தயாரிக்கலாம்.பழைய ஜீன்ஸ், ஷர்ட், சேலை போன்ற துணிகளை வெட்டி அழகான கிளாத் பேக், பர்ஸ் போன்றவையாக மாற்றலாம்.
* குஷன்/தலையணை உறை தயாரிக்கலாம். பழைய பட்டு சேலையை குஷன் அல்லது தலையணை உறையாகத் தைக்கலாம். வீட்டுக்குள் அழகு கூடும். மேலும் காட்டன் துணிகளை தலையணை உறைகளாக மாற்றலாம்.
v நன்கொடை அளிக்கலாம். பழைய ஆனால் நல்ல நிலையில் உள்ள துணிகளை ஆதரவற்றோர் இல்லம், பசுமை அமைப்புகள் போன்றவற்றிடம் வழங்கலாம்.
* ஆன்லைன் விற்பனை செய்யலாம். பழைய துணிகளை பல வகையாக புகைப்படம் எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம். இதற்கென தனி மொபைல் செயலிகள் கூட இருக்கின்றன.
* கால்மிதி/ மேட் தயாரிக்கலாம். பெரும்பாலும் கால்மிதிகள் உருவாக்க கைத்தையல் போதுமானது. பழைய டீ சர்ட் மற்றும் காட்டன் உடைகளை நீளமான ரிப்பன்கள் போல் வெட்டி அப்படியே மெஷினில் அடித்து கால்மிதியாக பயன்படுத்தலாம்.
* மறுசுழற்சி செய்யலாம். பழைய இரும்பு கடைகள் அல்லது பிளாஸ்டிக் மறுசுழற்சி கடைகளில் பாலிஸ்டர் உடைகளை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவர். அங்கே விற்பனை செய்யலாம்.
* பணமாக மாற்றலாம். ஒரு சில கடைகளில் பழைய துணிகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பர். இது பழங்கால வழக்கம் தான். அப்படியும் இதனை அப்புறப்படுத்தலாம்.
* கூப்பன்கள் மற்றும் சலுகைகள் பெறலாம். ரிலையன்ஸ் போன்ற கடைகள் பழைய துணிகளை பெற்றுக் கொண்டு அதற்கு புதிய உடைகள் வாங்க கூப்பன்கள் மற்றும் சலுகைகள் கொடுக்கின்றனர். அப்படியும் பழைய துணிகளை அப்புறப்படுத்தலாம்.
* கனமான டீசர்ட்டுகள் போன்ற துணிகளை கண்ணாடிப் பொருட்கள் மற்றும் பீங்கான் சாமான்களை உடையாமல் அடுக்கி வைக்க பெட்டிக்குள் பயன்படுத்தலாம். மேலும் பித்தளை, வெள்ளி பொருட்களை சுற்றி வைக்கவும் பயன்படுத்தலாம்.
– கவின்.