உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய சுவாமிகளை தரிசிக்க தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். சுவாமியை தரிசித்துவிட்டு, மலைமேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுத்தப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. கோயில் சுவர், தளம் மற்றும் சுற்றுப்பகுதியில் தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.