முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘கோவையில் எல்காட் நிறுவனத்தின் சார்பில், ரூ158 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்தேன். அதேபோல கோவையின் அடையாளமாக மாற இருக்கும் ரூ133 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டுள்ளேன். கட்டுமான பணிகள் முடிந்து ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்து வைப்போம் என்றார். மொத்தம் 165 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள செம்மொழிப்பூங்காவில், முதல்கட்டமாக 45 ஏக்கரில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் போன்ற பலவகையான தோட்டங்கள், சிற்பங்கள், இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
ரூ126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம்: 3500 பேருக்கு வேலைவாய்ப்பு
‘தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தனர். நேற்று முன்தினம் மாலை, குறைகளை எல்லாம் நானே அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று கேட்டறிந்தேன். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு, குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ126 கோடி செலவில், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தொழில் வளாகம் கட்டப்படும். இந்த வளாகத்தில் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 1,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மேலும் ஒரு ஐடி பார்க் 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘கோவைக்கு கலைஞர் ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திராவிட மாடல் ஆட்சியிலும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கோவைக்கு என்று மேலும் சில புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கோவை உருவெடுத்திருக்கிறது. இதனால் பல நிறுவனங்களுக்கு அலுவலகங்களுக்கான இடத்தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே, 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.
கலைஞர் ஆட்சி காலத்தில் சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப்போல கோவையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 3 மில்லியன் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம், கோவை மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்’ என்றார்.
நூலகத்தின் சிறப்பம்சங்கள்: ரூ50 கோடிக்கு புத்தகங்கள்
* இந்த நூலகத்தில் ரூ50 கோடிக்கு புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் மற்றும் கணினி, இதர உபகரணங்கள் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் ரூ5 கோடிக்கும் செய்யப்பட உள்ளது.
* 4 மின் தூக்கிகள், 10 கேஎல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பேனல் அறை, குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடமானது வரும் 2026 ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது.