Tuesday, February 27, 2024
Home » டிச.30ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

டிச.30ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

by Neethimaan
Published: Last Updated on

சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கத்தில் 110 ஏக்கர் நிலப் பரப்பில் 86 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பயணிகளின் வசதிகளுக்காகவும் இந்த நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் தேங்கி கடல் போல் காட்சி அளித்தது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். மழைநீர் கால்வாய்கள் அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளிப்போனது. இதை தொடர்ந்து, தற்போது ஆக்கப்பூர்வமான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே முதற்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து கடந்த நவ.12-ம் தேதி அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த (டிசம்பர்) மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், வருகிற 30-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வருகிற 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

nineteen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi