சென்னை: தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி அந்தஸ்து உயர்த்தப்பட்டு டிஜிபியாக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இயக்குநராக இருந்த சீமா அகர்வால் புதிதாக உருவாக்கப்பட்ட சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவில் சப்ளை சிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருந்தது. அது தற்போது டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.