சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அடையாறு மண்டலங்களில் மறுசீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை அகற்றும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் இராஜேஷ்வரி நகர் முதல் பிரதான சாலையில் குடிநீர் வாரிய பணிகள் முடிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன், இன்று (08.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்து பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அடையாறு மண்டலம் வார்டு -175 வேளச்சேரி ஏரியில் ஆம்பிபியன் வாகனங்கள் மூலம் ஆகயத்தாமரை அகற்றப்படும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆகாயத்தாமரைகளை துரிதமாக அகற்றிட உத்தரவிட்டார். வேளச்சேரி ஏரியில் 137 லாரிகள் மூலமாக ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.