சென்னை: செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேற்கூரை இல்லாததனால் திறந்தவெளியில் சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறமும், மழைக்காலங்களில் மழையில் ஒதுங்குவதற்கு இடமில்லாத சூழலும் நிலவுகிறது. செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 மாநகர பேருந்துகள் இன்று முதல் புழல் ஏரி எதிரே உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநகரப் பேருந்துகள் சேவை இடம் மாற்றம்
0