புதுடெல்லி: தொழில்பாதுகாப்பு படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்விந்தர் சிங் பாட்டி, 1990ம் ஆண்டு பீகார் மாநில கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் சிஐஎஸ்எப் இயக்குநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அடுத்த ஆண்டு செப்.30ம் தேதி வரை பதவியில் இருப்பார். அதே போல் தற்போது சஷாஸ்த்ரா சீமா பால் தலைவராக இருக்கும் தல்ஜித்சிங் சவுத்திரி அடுத்த ஆண்டு நவம்பர் 30 அன்று பணி ஓய்வு பெறும் வரை எல்லை பாதுகாப்பு படை இயக்குனராக பணியாற்றுவார். தல்ஜித்சிங் சவுத்ரி 1990ம் ஆண்டு உத்தரபிரதேச கேடரின் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.