திருமலை: தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுத்துறை தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான தில்ராஜூக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடு ஆகியவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 4ம் நாளான நேற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, 4வது நாளாக நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement


