சென்னை: சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்கும் பிரபலங்கள் மதுவுடன் கொக்கைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த 2 போதைப்பொருட்களும் எப்படி ஊடுருவி வருகின்றன. அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் விவரம் வருமாறு:
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கோகோ என்ற தாவரத்தில் இருந்துதான் கொக்கைன் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. கொக்கைன் இலைகளை பறித்து காய வைத்து பொடியாக்கி போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடைவில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன. இருப்பினும் தடையை மீறி கொக்கைன் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகிறது. நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாக்களில் வரும் வாலிபர்கள் கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள். பவுடராக மூக்கு வழியாக நுகர்ந்தும், பல் ஈறுகளுக்கு இடையில் வைத்தும் போதை ஏற்றுகிறார்கள். அதே நேரத்தில் கொக்கைனை ஒரு சில்வர் பேப்பரில் வைத்து அதன் கீழே லைட்டரில் தீயை காட்டி அதன் மூலமாக வெளியேறும் புகையை நுகர்ந்தும் கொக்கைன் போதையை அனுபவிக்கிறார்கள். பவுடர் வடிவிலான கொக்கைன் வெள்ளைப் பொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவார்கள். அடுத்ததாக புகைக்கக்கூடிய வகையில் சற்று திடப்பொருளாக கொக்கைனை மாற்றியும் பயன்படுத்துகிறார்கள்.
பேக்கிங் சோடா அல்லது அம்மோனியாவுடன் கலந்து இதனை உருவாக்குகிறார்கள். இதனை சூடுபடுத்தி புகையாக உறிஞ்சுவதன் ரத்தத்தில் கொக்கைன் விரைவாக கலந்து அதிக போதையை ஏற்படுத்துகிறது. இதேபோன்று சில ரசாயனங்களை கொண்டு வீடுகளிலேயே தயாரிக்கப்படும் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு போதைப்பொருட்களையும் தான் நடிகர் காந்த் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார். இவரை போன்று பிரபல நடிகர், நடிகைகள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்க வழக்கங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் வார இறுதி நாட்களில் அவர்கள் பாலியல் அழகிகளை தேடிச் சென்று இன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த விஷயத்தில் மிகவும் வீக்கான சினிமா பிரபலங்கள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்தாம்பெட்டமின்போதைப்பொருட்களை நீண்டநேர பாலியல் இன்பத்துக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன. காந்தை தொடர்ந்து மேலும் பல திரை பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கும்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.