சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் மார்தா கோஸ்டியுக்குடன் (22 வயது, 21வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (23 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை டெய்லர் டவுன்செண்டை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார். முன்னணி வீராங்கனைகள் லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), பவுலா படோசா (ஸ்பெயின்), அரினா சபலென்கா (பெலாரஸ்), லியுட்மிலா சாம்சனோவா, மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்
previous post