சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 6-2, 6-3 என சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
ஸ்பெயினின் பவுலா படோசா, 6-4, 6-4 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவையும், 3ம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, 7-5, 6-2 என உக்ரைனின் எலினா ஸ்டோலினாவையும், கனடாவின் லேலா பெர்னாண்டஸ், 6-1,6-4 என ரஷ்யாவின் டயானா ஷ்னைடரையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் கின்வென், 5ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ஆடவர் ஒற்றையரில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.