லண்டன்: 3 வயது குழந்தைக்காக வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வைரலானது. இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஜெம்மா கிர்க் போன்னர்(30). இவர் சம்பவத்தன்று தனது 3 வயது மகனான ஜேக்சனுடன் பேரோ இன் பர்னஸ் பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் தனது மகனுக்கு மிக பிடித்த உணவான சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் ஆர்டர் செய்த சிப்ஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் துண்டு இருந்ததை பார்த்த ஜெம்மா அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கடை நிர்வாகியை அழைத்து இந்த சிகரெட்டை எனது மகன் விழுங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று முறையிட்டதோடு தனது ஆதங்கத்தை வெளியிட்டார். உணவு பாதுகாப்பு அத்தியாவசியமான ஒன்று என கூறிய உணவு நிறுவனம், தங்கள் தவறை ஒப்புக் கொண்டதோடு இதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜெம்மாவிற்கு உத்தராவதம் அளித்தனர். சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் இருந்ததை ஜெம்மா புகைப்படம் எடுத்து தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.