சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆக.27ல் நடைபெற்றது. 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், விரைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்தினர். தற்போது 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு குழு தரப்பில் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
குரோம்பேட்டையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
0