சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 6.2 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக குறைந்தது.