சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம், சேரன் நகரில் அமைந்துள்ள துணை மின்நிலைய அலுவலகத்தில், நாளை காலை 11 மணியளவில் செயற் பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கவுரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலபாக்கம், அரசன்கழனி மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய மின் சார்ந்த குறைகளையும், பிரச்னைகளையும் கூறி தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.