ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள பல கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே கிருஷ்ணரை தரிசித்து வழிபட்டனர்.கிருஷ்ண பகவானை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள், மேள தாளங்கள், கோலாட்டம் ஆடியபடி ஊர்வலம் நடைபெற்றது.
இது குறித்து கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கூறுகையில், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள அனைத்து யாதவர்களும் இன்று கிருஷ்ணாஷ்டமியை வெகு விமரிசையாக கொண்டாடி, மாலையில் சுவாமிக்கு புஷ்ப ராகம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவதால், பக்தர்கள் அனைவரும் இந்த புஷ்ப யாகத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து இறைவனின் அருள் பெற வேண்டும் என்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கிருஷ்ணாஷ்டமியை முன்னிட்டு, தேவஸ்தான வளாகத்தில் உள்ள சப்த கோகுலத்தில் உள்ள கிருஷ்ணருக்கு, தேவஸ்தான வேத பண்டிதர்கள் சப்த பசுக்களுக்கு சாஸ்திரப் பூர்வமாக பூஜைகள் செய்யப்பட்டு தீப தூபம் நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான செயல் அலுவலர் மூர்த்தி துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணாரெட்டி, உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோசாலை பொறுப்பாளர் தனபால் கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிருஷ்ணா மந்திரில் கிருஷ்ணாஷ்டமி விழாவை கோயில் அர்ச்சகர்கள் வெகு விமர்சையாக செய்தனர். முன்னதாக கிருஷ்ணருக்குத் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, கிருஷ்ணருக்கு தூப, தீபம், பிரசாதம் வழங்கி, சுவாமி தரிசன செய்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் அகில பாரத யாதவ சங்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி விழா வெகு விமரிசையாக நடத்தப் பட்டது. மாலையில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.