பீஜிங்: இந்தியா தலைமையில் காணொலி மூலம் நடக்கும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் சீன பிரதமர் லி கியாங் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைமையில் நடந்த ஜி20 மாநாட்டில் இறுதி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.