பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழைக்கு 11 பேர் பலியாகி விட்டனர். சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு மாகாணமான லியானிங்கில் சமீபத்திய மழையால் கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜியான்சங் கவுன்டி மற்றும் சுஸ்ஹாங் கவுன்டியில் மழையினால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
சாலைகள், மின்சார இணைப்புகள், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களும் மழையால் நாசமாகியுள்ளன. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் மாயமாகியுள்ளனர். முதல்கட்ட விவரங்களின்படி ஹூலுடோவில் மழையினால் 188,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.44மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.