டெல்லி: சீனாவில் இந்தாண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற நடவடிக்கை எடுக்கப்படும். உலகக்கோப்பை தொடரில் விளையாடாத வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது.