பெய்ஜிங்: கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்தில் இரண்டு புயல்கள் வீசின. முதல் புயல் சுகியான் நகரை தாக்கியது. இந்த புயலில் சுமார் 137 வீடுகள் சேதமடைந்தன. பல ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதமடைந்தன. மேலும் பன்றி பண்ணைகள் நாசமானது. புயலால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர். இரண்டாவது புயலானது யான்செங் நகரை தாக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். புயல் காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில் மழை, புயலால் சாலைகள் சேதமடைந்தன. புயல் தாக்கிய போது கார் காற்றில் பறந்து சென்று விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.